Monday, 2 February 2015

ஆகாயத் தாமரை - மாலா கஸ்தூரிரங்கன்

ஹாய் friends,

பொங்கல் வாழ்த்துகள் தோழமைகளே .

வந்துட்டேன் மாலா கதையோட 
ஆகாயத் தாமரை - மாலா கஸ்தூரிரங்கன் 

நம் லேடி பாலசந்தர் .........மாலாவோட சிறப்பே திரைக்கதை .....இதிலும் நிறைய இடங்கள் ரசிக்க முடியுது.

ஸ்ரீகாந்தன் ,ஸ்ரீவத்சன் ,ஸ்ரீனி என மூன்று சிங்ககளின் பெற்றோர் மாதங்கி ,ரவிச்சந்திரன் .........இவர்களின் ஏதோ தவறால் மணவாழ்வு தோற்றுப் போய் ,அவர்கள் மேல் உள்ள கோவத்தில் யாரிடமும் பேசாது இறுக்கமாக இருக்கும் ஸ்ரீவத்சன் ........தம்பியிடம் மட்டும் கொஞ்சம் இணக்கம் உண்டு.......மீண்டும் திருமணம் செய்ய வலியுறுத்த ..........அவனோ மறுத்து வரும் நிலையில் ,

ஸ்ரீனி தன் தோழி செந்தாமரைக்கு உதவி செய்யும் பொருட்டே மருத்துவனாக லட்சியம் கொள்கிறான்.அவன் குஷ்பூ வை காதலிப்பதை வத்சவ் ட்ட சொல்கிறான்.

செந்தாமரை சின்னசாமியின் இரண்டாவது மனைவியின் மகள் .......அதனால் தன் பெரியன்னையின் (கங்கை ) கொடுமைக்கு ஆளாகிறாள் ......மேலும் பெரியன்னையின் மருமகன் கண்ணும் அவள் மேல் விழ ...........அதற்கு ஏற்ப செந்தாமரை அக்கா பூவரசியும் இரண்டாவது பிரசவத்தில் இறக்கிறாள் ........இரு குழந்தைகளும் பெண்ணாக போக இதை சாக்கு வைத்தே ,அவளை மணமுடிக்க ஊர் பஞ்சாயத்தை கூட்டு கிறான் .......அறியும் ஸ்ரீனி அதை தடுக்க தான் மணமுடிக்க எண்ண ...........தம்பியின் காதல் அறிந்த ஸ்ரீவத்சன் தானே தாலி கட்டி விடுகிறான்.

அதிரிச்சியில் ,அவளை ஏற்க முடியாமல் திண்டாடும் ஸ்ரீவத்சன்,கணவனையே முதலாளியாக எண்ணும் செந்தாமரை ,இவர்களை இணைக்க மாதங்கியும் ,ஸ்ரீனியும் கூட்டு ......வைக்க ......
லேடி பாலசந்தர் மாலாவின் கலக்கல் திரைக்கதை காரணமாக ..........கதை சும்மா அதிருது .........
செந்தாமரையின் அறியாமை,அவள் தமிழும் ..........சிரிப்பு என்றால் ,
அவள் ஏக்கமும்,சகிப்புத்தன்மை,உணர்வுகள் மிகவும் மனதை வருத்துகிறது ........

பூவரசி மூத்த மகள் திரிஷா ,இளையவள் தந்தை ,மற்றும் கங்கையால் ஒதுக்கப்பட்ட சின்னு வுக்கு தாயாக இருக்கும் அவள்,ஸ்ரீவத்சன் ஒதுக்கம் கண்டு வருந்தி .........ஒதுங்குவதும்,என நம் அனுதாபத்தை அள்ளி செல்கிறாள் .

ஸ்ரீனி ,மாதங்கியின் திட்டப்படி ஸ்ரீவத்சன் தன் மனைவியுடன் சேர்வதும்,அந்த குழந்தைகளை ஏற்பதும் கவிதைபோல அழகாக சொல்லி இருக்காங்க.

நம் தேசியமலர்  சோடை போகுமா ?

தமிழர் திருநாளில் நல்ல கதை தந்த மாலாக்கு ஒரு hats off 

Friday, 21 November 2014

என்றும் மகிழ்வுடன் - புகழ் பெற்று வரும் பிரேமாவின் பத்தாவது நாவல்.

என்றும் மகிழ்வுடன் - புகழ் பெற்று வரும் பிரேமாவின் பத்தாவது நாவல்.

கதாநாயகன் - வினய்
கதாநாயகி - ஹரிணி.


ரேணுகா கணவரை இழந்து ,வினய் ,மனோஜ் எனும் மக்களை தனித்தே வளர்த்தவர்.வினய் தம்பியையும் ,அன்னையும் தன் வாழ்வாய் கொண்டவன்.அவர்களைப் பிரிய மன்மில்லாமல் IIT படிப்பை தூக்கி எறிந்தவன்.இன்று தன் உழைப்பில் ஒரு புது அப்பார்ட்மெண்ட் ல் வீடு வாங்கி அன்னையை குடியேற்றியவன் .வேலை விஷயாமாக இந்த முறை மட்டுமே போவேன் என்று சிங்கப்பூர் செல்லும் அவன் அங்கே ஹரிணியின் காதலில் விழ்கிறான்.
சிங்கப்பூர் செல்லும்போது தவறாக பெண்ணிடம் நடந்ததாக கூட்டம் கூட்டி அவமான படுத்துகிறார் பாண்டியன்.அவரை தன் வாழ் நாளில் சந்திக்கவே கூடாது ன்னு சவால் விட்டு செல்கிறான் .அவர் ஹரிணியின் அத்தையின் கணவர் ,தான் பிளாட் க்கு அருகில் இருக்கிறார் என்று அறிகிறான்.காதலும் ,அவமானமும் போட்டி போட இறுதியில் காதல் வெல்கிறது .

கல்யாணத்துக்கு பின்னும் அவருடன் மோதல் தொடர்கிறது.அவர் வீட்டிக்கு போகாமல் ,ஹரிணி போவதையும் தடுக்கிறான்.அது தம்பதியர் இடையே பிணக்காகி முட்டல்கள் ,காதல் என்று போகிறது.

மனோஜ்,வினய் புரிதல் கதையின் பிளஸ்.அண்ணனை அடிக்கும் அம்மாவிடமே பேசமால் இருக்கும் அளவு அவன் பாசம் சூப்பர்.அத்துடன் இசை ஞானம் கொண்ட அவன் ,புகழ்பெற்ற பாட்டு போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறுகிறான் .அதில் வரும் தடங்கல்களை தாண்ட அறிவுரை சொல்லும் அண்ணியை அம்மா என்று கூப்பிட்டு ........wow......what a writing ?



பாண்டியனின் மனைவி அபிராமி ,ஹரிணி தன் மாமியாரை ரேனும்மா ன்னு சொல்லும்போது ,தன்னை அம்மா என்று அழைக்க யாருமில்லை என்று வருந்த ,மனோஜ் அவரை அம்மா என்று அழைக்கிறான்.அதை கண்டும் மகிழும் ரேணுகா...

மனோஜ் குறும்பும்,மலரிடம் செய்யும் வம்பும்,அண்ணி,அம்மா விடம் தன் அண்ணனுக்காக பேசும் இடமும் சூப்பர்.விழாவில் தன் அண்ணனை அப்பா என்று அழைப்பது ...........சூப்பர்.

மனோஜ் ஜின் காதலி பிளஸ் அவர்கள் சிறுவயது தோழி மலர் .
டாக்டர் அவளும் அக்குடும்பத்தில் ஒருவராகவே வளருகிறாள்.
நட்பு,காதல்,பாசம் குறும்பு என்று ஒன்றையும் விடல பிரேமா .ட்விஸ்ட் களின் ராணி ட்விஸ்ட் யும் விடல ,ஆனால் பாதியில் நமக்கு தெரிந்து விடுது..


எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் வினய் ஏன் பாண்டியன் மேல் மட்டும் கோவம் ?,அவரை மன்னித்து சமாதானமாவானா .........என்று அறிய படியுங்கள் பிரேமா கதை.


பிரேமா முடியல ,ஐயோ எதைச்சொல்ல ,எதைவிட...........
சூப்பர் டுப்பர் கதை.நன்றி.


Thursday, 20 November 2014

என் கவிதைகள்

அன்பில் 
ஆளுமையில் 
இயல்பில்
ஈரத்தாய்
என்னை ...
உணர்ந்தேன் 
உலகை 
அடைந்தேன் 
உவகை ...
கொண்டேன் 
எங்கள் முத்தே(தூத்துக்குடி )
ஒப்பில்லா ...
ஈஸ்வரியே


இணையம் எனும் கடலில் 
திசை அறியா படகாய் 
தத்தளித்தேன் ....
வந்தாய் கலங்கரை விளக்காய்...
வழிகாட்டினாய்
ஆசானாக ...
அன்பாக தட்டி கொடுத்து,
நட்பாக ...
பங்கேற்று...
அரவணைத்தாய்
மூத்த சகோதரியாய்
அமுதாய் 
பொழிந்த என் 
அமிர்தே...
நீ வாழிய ....
பல்லாண்டுகள் .
 
 
பெண்மை கடலில்
குளித்த முத்துக்கள்
அன்பு ,
பாசம்
விட்டுகொடுத்தல்
பகிர்தல்
சுயம்
என ஐம்பொன்னில்
கோர்த்து
அணிந்தோம் அழகாக
தோழியாய்
சகோதரியாய்
தாயாய்
மகளாய்
உறவாய்
தொடர்ந்தோம் ........
தொடருவோம் ..........
அடுத்த பிறவியிலும் .
 
 
 
அன்புக் கூடு ,
பாசக் கூடு
நேசக் கூடு
என்றே இறுமாந்திருந்தேன்
நட்பு என்னும்
மாயையில்
அறிவு கண்ணை மறைக்க
பூம் பூம் மாடாய்
சுகித்திருக்க ,
எட்டி எட்டிப் போயும்
சுற்றி சுற்றி வட்ட மிட்ட
சிட்டுக்குருவி ஒன்று.
மகிழ்வாய்
சிறகடித்து
என் மாயை விலக்கி
மெய்யுருவம்
காண்பித்ததே .........
என்னை மீட்க வந்த
குலசாமியோ ...........
சுப்பனுக்கு பாடம் சொன்ன
தகப்பன் சாமியோ ..........
மேகி வாழிய
நீ பல்லாண்டு
 வருங்கால தூண்கள் 


நேற்று 
அரசுப் பள்ளிகள்
அறிவை விதைத்து 
நன் குடிமக்களை 
அறுவடை செய்தனர் 

இன்று 
அரசியல்வாதிகள் 
கல்விக் கூடங்கள் 
கட்டிடங்களை விதைத்து 
பணத்தை அறுவடை செய்கின்றனர் 

நாளை 
நன்மக்களுக்கு 
என் செய்வர்...................?
தங்கம் 

மங்கையின் மோகம்.
கணவனின் கௌரவம் 
வங்கியின் கையிருப்பு 
முதலாளியின் முதலீடு 
குடியானவனின் கடன்
ஏழையின் கனவு
முதிர்கன்னியின் கண்ணீர்
காதல் 

காதல் புனிதமானது 
அது என் வீடு வரை 
வராத போது,

காதல் சோதனையானது 
என் தங்கை 
காதலிக்கும் போது,

காதல் சுகமானது
நான் காதலிக்கப் பாடும்போது 

காதல் வேதனையானது 
கல்யாணத்திற்குப் பின் 
காதல் ...............
தொலைந்து போகும்போது 

காதல் இனிமையானது 
முதுமையிலும் 
உணரும்போது.
ஆணவம் ,அகந்தை
சுயநலம் ,திருட்டுக்கு 
வெற்றி சில காலமே.
சட்டம் நீதி .........
எல்லாவற்றுக்கும் திரை போட்டாலும்
கடவுளின் சந்நிதியில்
ஒரே நீதியே ..........
யாரும் பார்க்கலை என
கொக்கரிக்கும் ............
இரு கண்ணால் நோக்கும் அப்பன்
மூன்றாவது கண்ணால் பார்க்கும்போது
வம்சமற்று.........போவாய்..........
அந்தோ ..........பரிதாபம்
அன்று காலம் கடந்து இருக்கும்
 
ஆண்பிள்ளை
வாரிசாய் கொண்டாடி,
தந்தையின் வீரமாய் ,
அன்னையின் பெருமையாய் ....
அண்ணனாய் அரட்டலும்,அரவணைப்பும்,
தம்பியாய் நட்பும் ,குறும்பும் ,
கணவனாய் காதலும் ,,மாப்பிள்ளை முறுக்கும்,
கொண்ட தன்மானசிங்கம் ................
தன் மகள் என்னும் தேவதைக்கு
சேவகனாய் ,தாயுமானவனாய் .....
மாறும் அதிசய மானுட தெய்வம் .
ஆண் .........

Sunday, 9 March 2014

காமராஜர்.
அன்னை சிவகாமியின் அருமை புதல்வனே!

தமிழ் அன்னையின் தவப்புதல்வனே!

விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்து

சரித்திரம் படைத்த நாயகனே!

எளிமையின் இருப்பிடமே!

ஏழைப் பங்காளனே!

ஏற்றமிகு சிந்தனையின் சிகரமே!

ஆடுமேய்ப்பவனும்,மாடுமேயப்பவனும்

நாடாள எண்ணி,பள்ளிகள் பலகட்டி

கல்விக் கண்திறந்த ரத்தினமே!

மதிய உணவுத் திட்டத்தின் மன்னவரே!
 சீருடை தந்த செம்மலே!

அணைகள் பல கட்டி உழவர்களுக்கு

அமுதூட்டிய அண்ணலே!

சட்டங்கள் கற்றதில்லை,

பட்டங்கள் பெற்றதில்லை,

திட்டங்கள் பலகோடி

தந்திட்ட அறிவுபெட்டகமே!

வரலாற்றின் வைர மகுடமே!

குமாரசாமியின் குலவிளக்கே!

கறுப்புக் காந்தியே!

ஆடம்பரமில்லா முதல்வரே!

தமிழக பொற்கால ஆட்சியின் மன்னவரே!

உன்றன் பிறந்தநாள்

என்றைக்கும் பொன்நாள்!

விண்ணும்,மண்ணும் உள்ளவரை

காமராஜர் புகழ் என்றும்

வளரும் ! மலரும் ! மணக்கும் !  
                                                                    நன்றி! 

Saturday, 8 March 2014

கதை ஒரு பார்வை.



நெஞ்சமெல்லாம் நீயே
பிரேமா பாலசுப்ரமணியம்
கதாநாயகர்கள் :சத்யநந்தன்,மகேந்திரன்.
கதாநாயகிகள் : மதுமிதா,நந்தினி.
முக்கிய பாத்திரம் : ஜானகி
ஜானகி காதலித்து மனம் முடித்து வாழ்வில் தோற்றவர்.அதனால் கைபெண்ணாக அண்ணன் வீட்டில் தன் மகளுடன் இருக்கிறார்.விபத்தில் அண்ணன்,அண்ணி இறக்க அவர்கள் மகனை தன் மகனாக கொண்டு வாழ்கிறார்.தன் பிள்ளைகளிடம் காதலுக்கு எதிரான கருத்துடன் வளர்க்கிறார்.அப்பிடியே வளர்ந்துட்டா நமக்கு கதை கிடைக்காதே.
இருவரும் காதலில் விழ்கின்றனர்.தங்கள் காதலை சொல்லுமுன் ஒரு விபத்தில் கோமா நிலை அடைகிறார்.பிரிச்சனையை எப்பிடி சமாளித்து தங்கள் வாழ்வில் ஒன்று சேர்கின்றனர்.என்பது மீதி கதை.முடிவில் ஜானகி குணம் அடைந்து தங்கள் மக்களின் வாழ்வில் மனம் நிறைகிறார்.

அழகாக கவிதை போல செல்லும் கதை ஜானகி கோமா நிலையில் கொஞ்சம் தடுமாறுகிறது.
மகேன் எல்லாரையும்விட மனதில் நிற்கிறான்.மகேன் பாத்திர படைப்பு சிறப்பு.அவன் சத்யாவை முந்துகிறான்.
மது, மகேன் இருவரும் கலக்குகிறார்கள் .